விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் காவல் துறை துணைதலைவர் திரு.ராஜேந்திரன் இ.கா.ப அவர்கள் ஆய்வு நடத்தியுள்ளார். அதுசமயம் அருப்புக்கோட்டை துணை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் மற்றும் நகர் காவல் ஆய்வாளர், அனைத்து மகளீர் காவல் நிலைய ஆய்வாளர் ஆய்வுப்பணியின்போது உடனிருந்தனர். மேலும் காவல் துறை துணை தலைவர் அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றவிதமாக காவல் துறையினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதனால் அந்தப்பகுதி முழுமையும் காவலர்கள் மட்டுமே இருந்தனர் வெளியாட்கள் மற்றும் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. […]