Police Department News

தமிழக அரசின் உயா் அதிகாரிகள் இன்று திடீரென டில்லி செல்கின்றனா்

தமிழக அரசின் உயா் அதிகாரிகள் இன்று திடீரென டில்லி செல்கின்றனா். தமிழக உள்துறை முதன்மை செயலாளா் S.K.பிரபாகா்,தமிழக முதலமைச்சரின் செயலாளா் P.செந்தில்குமாா்,தமிழக போலீஸ் டிஜிபி J.K.திரிபாதி,IPS ஆகியோா் இன்று மாலை 5.05 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ்(6E-2752) விமானத்தில் டில்லி செல்கின்றனா். தமிழக அரசு தலைமை செயலாளா் சண்முகம் இன்று இரவு 7 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ்(6E-2029) விமானத்தில் டில்லி செல்கிறாா். தமிழக அரசு உயா் அதிகாரிகள் திடீரென ஒட்டுமொத்தமாக டில்லி செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.