இது சத்தியம்….. தேவையற்ற பயணம் கிடையாது.. – வாகன ஓட்டிகள் தந்த உறுதிமொழி படிவம்…! கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர் பகுதியில் உள்ள புதிய பஸ் ஸ்டேண்டு, நேதாஜி சிலை சந்திப்பு, சித்தூர்கேட், நெல்லூர்பேட்டை ஏரிக்கரை, உள்ளி கூட்டு ரோடு, பரதராமி, சைனகுண்டா, பத்திரபல்லி உள்ளிட்ட பல இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணித்தும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டும்வருகின்றனர்.இந்த […]
Month: May 2021
வெங்காய மூட்டைகளுக்குள் மதுபாட்டில்களை கடத்திய நபர்கள்..!
வெங்காய மூட்டைகளுக்குள் மதுபாட்டில்களை கடத்திய நபர்கள்..! கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு அருகே இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் 26ஆம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரு மார்க்கெட் பகுதியிலிருந்து 300 மூட்டைகள் வெங்காயம் ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது லாரி ஓட்டுநரும் லாரியில் அமர்ந்திருந்த இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் முன்னுக்குப்பின் முரணான தகவலைக் கூறியதால் சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், லாரி முழுவதையும் சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.போலீசார் […]
கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோபாலபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம்:- கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோபாலபுரம் கிராமத்தில் நடைபெற்றது. பொதுவாக கொரோனா தொற்றானது கிராமம் நகரம் என பேதமின்றி நோய்தாக்கி வருகிறது. அந்த நோய்த்தொற்றை பரவாமல் தடுப்பதற்காக அருப்புக்கோட்டை குற்றபிரிவு ஆய்வாளர் திரு.ராஜபுஷ்பா அவர்கள் கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்தார். அப்போது பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது சமூக இடைவெளியை கடைபிடித்தனர். அதன் பின்பு கொரோனா விளிப்புணர்வை பற்றியும் அதை வராதவண்ணம் கடைபிடிக்கும் வழிகளை எடுத்துரைத்தார்.
கொரோனா ஊரடங்கனால் உண்ண உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தினர்…
விருதுநகர் மாவட்டம்:- கொரோனா ஊரடங்கனால் உண்ண உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தினர்… இந்த அரும்பணிகளானது அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் கோவில் வளாகத்தில் மற்றும் சாலைகளின் ஓரத்தில் தங்கி இருக்கும் நபர்களுக்கும் உணவளிக்கப்பட்டது. நாம் பூமியில் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நல்லகாரியத்தை செய்துவிட்டு செல்வது வழக்கம். ஆனால் தான் வாழும்போதே நற்பணிகளை செய்து வருபவர்களாக அருப்புக்கோட்டை அருகேயுள்ள தனியார் […]
நாடகக் கலைகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு.
நாடகக் கலைகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு. திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காங்கயம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனராசு அவர்கள் காங்கேயம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நாடகக் கலைகள் மூலம் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் காவல் ஆளினர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆய்வு மற்றும் முகக்கவசங்கள் வழங்குதல்
ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் காவல் ஆளினர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆய்வு மற்றும் முகக்கவசங்கள் வழங்குதல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் அவிநாசி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் ஆளினர்களுக்கு ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அறிவுரைகள் வழங்கி காவல் ஆளினர்கள் மற்றும் உணவின்றி வாடும் முதியோர்களுக்கு உணவு மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார்கள்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சோதனை
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் தலைமையில் தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர் இதில் விதிகளை மீறி வந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது
மனித வாழ்க்கையில் இன்று வரை கற்பனைக்கு எட்டாத நிகழ்வென்றால் அது கொரோனாதான்.
விருதுநகர் மாவட்டம்:- மனித வாழ்க்கையில் இன்று வரை கற்பனைக்கு எட்டாத நிகழ்வென்றால் அது கொரோனாதான். அது நம்மில் பலரது வாழ்க்கையை அப்படியே புயலாக புரட்டிபோட்டவிதம் இன்று நம்முடன் உறவாடிக்கொண்டு இருந்த சொந்தபந்தம், நட்புறவுகள் பலரும் உயிருடன் இல்லை. எத்தனை பெரிய பணம் படைத்தவர்களாலும் கொரோனாவை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாமல் போய்விட்டது. இத்துனைத்துயரம் நடந்தாலும் அதனை எதிர்கொண்டு இன்று வரையிலும் களத்தில் இருப்பவர்கள் என்பது சில துறைகளும் அடங்கும் அதில் காவல் துறையும் ஒன்று. பொதுமக்களாக இருக்கட்டும் […]
இன்று காலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் மதுரையில் இருந்து ஏரல் நோக்கி காய்கறி ஏற்றி வந்த TN76AJ 8516 தோஸ்த் என்ற வாகனமானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது
விருதுநகர் மாவட்டம்:- இன்று காலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் மதுரையில் இருந்து ஏரல் நோக்கி காய்கறி ஏற்றி வந்த TN76AJ 8516 தோஸ்த் என்ற வாகனமானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது அதிகாலை நேரம் என்பதால் ஓட்டுநரின் கவனக்குறைவினால் சாலையின் தடுப்பில் இருந்த மின்கம்பத்தில் மோதியதால் விபத்து நடந்ததாக தெரிகிறது . மேற்படி அந்த வாகனத்தில் வெகாயம், காய்கறிகள் அடங்கிய மூடைகள் இருந்துள்ளது. இந்த […]
உண்ண உணவு இல்லாமல் இருந்த பெரியவர்க்கு உண்பதற்கு உணவும், முககவசமில்லாத பெண்ணிற்கு முககவசம் வழங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் …
விருதுநகர் மாவட்டம்:- உண்ண உணவு இல்லாமல் இருந்த பெரியவர்க்கு உண்பதற்கு உணவும், முககவசமில்லாத பெண்ணிற்கு முககவசம் வழங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் … அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். எப்போதும் அதிகாலை வேளையில் காக்கும் காவல் பணிக்கு அவருக்கு வழங்கப்பட்ட பணிக்கான இடத்திற்கு சென்றுவிடுவார். வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்ற பெரியவரை பார்த்தார். அந்த வயதில் பெரியவரின் அருகில் சென்று முதலில் கேட்டது சாப்டீங்களா என்று கேட்டார் […]