Police Department News

கொரோனா வைரஸின் தாக்கமானது அதி தீவிரமாக பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம்:- கொரோனா வைரஸின் தாக்கமானது அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை எதிர்க்கொள்ளும் விதமாக விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் சிவகாசியில் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பின்னர் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் அறிவுரை வழங்கினர். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே தமிழக அரசு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு வெளியில் வரவேண்டுமெனவும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Police Department News

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினர் பலவகைகளில் பாதிப்படைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம்:- கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினர் பலவகைகளில் பாதிப்படைந்துள்ளனர். அந்த வகையில் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் காரியாபட்டி காவல் நிலையத்தினர் முன்னிலையில் திருநங்கைகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை காரியாபட்டி காவல் நிலையத்தில் திரு.சகாயஜோஸ் அவர்களால் வழங்கப்பட்டது. அதுசமயம் காவல்நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பலரும் […]

Police Department News

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவலர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடைபெற்றது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவலர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடைபெற்றது தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS அவர்களின் ஏற்பாட்டில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் உடல் நலனைக் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில் மருத்துவர் திருமதி.மாரீஸ்வரி தலைமையிலான மருத்துவ குழுவின் மூலம் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்பட்டது.. […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.05.2021) ஒரே நாளில் முக கவசம் அணியாத 951 பேர் மீது நடவடிக்கை – அபராதம் ரூபாய் 1,90,200/-ம் – மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 32 பேருக்கு ரூபாய் 16,000/-ம் ஆக மொத்தம் ரூபாய் 2,06,200/- அபராதம் 8விதிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.05.2021) ஒரே நாளில் முக கவசம் அணியாத 951 பேர் மீது நடவடிக்கை – அபராதம் ரூபாய் 1,90,200/-ம் – மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 32 பேருக்கு ரூபாய் 16,000/-ம் ஆக மொத்தம் ரூபாய் 2,06,200/- அபராதம் 8விதிக்கப்பட்டுள்ளது தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 12 பேர் கைது – 112 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 12 பேர் கைது – 112 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.05.2021) புதியம்புத்தூர், குரும்பூர், ஏரல், கோவில்பட்டி கிழக்கு, விளாத்திகுளம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய காவல் நிலையங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 12 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 112 மதுபாட்டில்கள் […]

Police Department News

தூத்துக்குடி, மந்திகுளம் பகுதில் பணத்திற்காக, சீட்டு வைத்து சூதாடிய நபர்கள் கைது

தூத்துக்குடி, மந்திகுளம் பகுதில் பணத்திற்காக, சீட்டு வைத்து சூதாடிய நபர்கள் கைது விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மந்திக்குளம் கருப்பசாமி கோவில் அருகே உதவி ஆய்வாளர் திரு. தேவராஜ் தலைமையிலான போலிசார் ரோந்து சென்றபோது, அங்கே ஊரடங்கு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து கொண்டிருந்த மந்திக்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராமர் (53), பாலசுப்பிரமணியன் மகன் கணேசன் (31), ஆறுமுகம் மகன் முனியசாமி (52), சோலையப்பன் மகன் பெருமாள் (51) மற்றும் குமராண்டி […]

Police Recruitment

தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் அருகே தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் அருகே தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். முன்களப் பணியாளர்களான தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுமார் 50 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா ஊரடங்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதை மேற்படி கூடடமைப்பு சார்பாக […]

Police Department News

20.05.2021 தூய்மையும் மாசில்லாத நகரமாக மாறும் பெசண்ட் நகர் கடற்கரையில் 100 க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன அடையாறு காவல் துறை உதவி ஆணையர் திரு.கௌதம் ( சட்டம் ஒழுங்கு )மற்றும் சமூக ஆர்வலர் Dr. பசுமை மூர்த்தி அவர்கள்

20.05.2021 தூய்மையும் மாசில்லாத நகரமாக மாறும் பெசண்ட் நகர் கடற்கரையில் 100 க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன அடையாறு காவல் துறை உதவி ஆணையர் திரு.கௌதம் ( சட்டம் ஒழுங்கு )மற்றும் சமூக ஆர்வலர் Dr. பசுமை மூர்த்தி அவர்கள் 20.05.2021 இன்று காலை 11. 00 மணியளவில் சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு கௌதம் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள் காவல் பணியோடு மக்களுக்கு சமூக பணியும் செய்துவருகிறார்.அடையாறு வண்ணாந்துரை பகுதியை […]

Police Department News

கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திரு.FEROZE KHAN ABDULLAH ( Admin) இ.கா.ப அவர்கள்

கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திரு.FEROZE KHAN ABDULLAH ( Admin) இ.கா.ப அவர்கள் 20.05.2021 தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் […]

Police Department News

கொரோனா முன்கள பணியாளர்களான காவல் துறையினருக்கு நோய்தடுப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம்:- கொரோனா முன்கள பணியாளர்களான காவல் துறையினருக்கு நோய்தடுப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று தமிழகத்தில் சமீபத்தில் அதிகரித்து வருகின்றது. அதன் விளைவாக நோய் தொற்றிலிருந்து பொது மக்களை காக்கும் தலையாய பணிகளில் தமிழக காவல் துறையானது முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றது. அந்த வரிசையில் அவர்களை காக்கும் வண்ணம் டாபே என்ற டிராக்டர் நிறுவனத்தின் மூலமாக சானிடைசர் மற்றும் முககவசம் அடங்கிய தொகுப்பினை அருப்புக்கோட்டை காவல் துறை துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு […]