Day: August 8, 2021
குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்பணர்வு.
குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்பணர்வு. புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் திருக்கோகர்ணம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக காவல்துறை துணை காண்கணிப்பாளர் திருமதி.லில்லி கிரேஸ் அம்மா அவர்களும் காவல் ஆய்வளர் திரு.ரமேஷ் அவர்களும் கேட்டு மக்களின் குறைகளை நிறைகளாக மாற்ற உறுதி அளித்துள்ளனர். குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளிகளை ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வும் மற்றும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.
போலி கனிமவள சான்று தயாரித்து கேரளாவிற்கு கருங்கல் கடத்திய லாரி ஓட்டுனர் கைது. லாரி பறிமுதல்
போலி கனிமவள சான்று தயாரித்து கேரளாவிற்கு கருங்கல் கடத்திய லாரி ஓட்டுனர் கைது. லாரி பறிமுதல் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு சோதனைசாவடியில் ராதாபுரம் தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியர் பேட்ரிக் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கேரளா நோக்கி சென்று கொண்டு இருந்த லாரியை மறித்து சோதனை செய்ததில் ராதாபுரம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கருங்கல் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த கனிம வளம் கொண்டு செல்வதற்கு […]
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே கடற்கரை சாலையில் காய்கறி ஏற்றிச் சென்ற மினி லாரி மீது கார் மோதி விபத்து, இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலி, கூடன்குளம் போலீசார் விசாரணை
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே கடற்கரை சாலையில் காய்கறி ஏற்றிச் சென்ற மினி லாரி மீது கார் மோதி விபத்து, இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலி, கூடன்குளம் போலீசார் விசாரணை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்நதவர் ஜோசப் இவருக்கு லிஜோ வயது,14 ஜிபின் வயது 11 இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் கார் கூடன்குளம் கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் காய்கறி ஏற்றிச் […]
பயணிகளுடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை தனது உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பயணிகளுடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை தனது உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இமாசல பிரதேசத்தில் பயணிகளுடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை தனது உயிரை பணையம் வைத்து பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இமாசலப் பிரதேச சிர்மிர் மாவட்டத்தின் ஷில்லாய் பகுதியில் 22 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்த்து. தேசிய நெடுஞ்சாலை 707 இல் பொஹ்ராட் காட் அருகே […]
கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெருமாத்தூர் பகுதியில் 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில் தளபதி நகரில் வசித்து லட்சுமணன், கீழமணக்குடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன், கீரப்பாளையம் பகுதியில் வசித்து […]
தூத்துக்குடி ஒருவர் கொலை: 4 பேர் கைது
தூத்துக்குடி ஒருவர் கொலை: 4 பேர் கைது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் வண்ணார் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் நடராஜன் (38) என்பவரை நேற்று (6.8.21) இரவு தூத்துக்குடி ராமசாமிபுரத்தில் உள்ள அவரது ஷிப்பிங் கம்பெனி முன்பு மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு […]
விளாத்திகுளத்தில் பரிசளிப்பு விழா
விளாத்திகுளத்தில் பரிசளிப்பு விழா கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (7.8.21) தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக விளாத்திகுளத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களிடம் கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி குழந்தைகளுக்கு ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி […]
தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் எஸ்.செந்தாமரை, நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் மகேஸ்வரி ரவிக்குமார், […]
ATM மிஷனை உடைத்துக் கொண்டிருந்த திருடன் போலீஸிடம் சிக்கிய தரமான சம்பவம்!
ATM மிஷனை உடைத்துக் கொண்டிருந்த திருடன் போலீஸிடம் சிக்கிய தரமான சம்பவம்! நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்திற்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளியை மோகனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் அடுத்த அணியாபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. மேலும் இயந்திரத்திற்குள் இருந்து சப்தம் வந்து கொண்டிருந்தது. போலீசார் எட்டிபார்த்த போது இயந்திரத்திற்குள் ஒரு நபர் அமர்ந்து பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைக்க முயற்சி செய்து […]