நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றம் தொடங்கியது கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் திருவிழா இனிதே துவங்கியது இதில் மாவட்ட ஆட்சியர் திரு.அ.அருண் தம்புராஜ்.IAS அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு. ஜவஹர்.IPS அவர்கள் கலந்து கொண்டனர்
Day: August 30, 2021
விழுப்புரம் செஞ்சி அடுத்த மோட்டூரில் தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் செஞ்சி அடுத்த மோட்டூரில் தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன், ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.குடும்பத்துடன் சென்னையில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பினர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை, ஆந்திராவில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார்.இதனிடையே, அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது, […]
சென்னையில் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு.காவல் ஆணையர் சங்கர் ஜிவால், IPS
சென்னையில் வீடு வாடகைக்கு விடும் அதிரடி உத்தரவு.காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,IPS சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க தேவையில்லை . வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் காவல் நிலையங்களில் ரகசியமாக […]
கிருஷ்ணகிரி மாவட்டம், சமல்பட்டி அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறி கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம், சமல்பட்டி அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறி கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோல்லப்பட்டி கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் நானா ரஞ்சன் பிரதான் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சாய் சரண் தேஜஸ்வி அவர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடந்த 26ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த […]
2021 ம் ஆண்டுக்கான காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் துப்பாக்கி சுடும் போட்டி
2021 ம் ஆண்டுக்கான காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் துப்பாக்கி சுடும் போட்டி 2021 ம் ஆண்டுக்கான காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று 29 ம் தேதி மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது, தென் மண்டல காவல் துறை தலைவர் திரு. J.S.அன்பு IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியில், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சரக டி.ஐ.ஜி.,கள் மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் சிவகங்கை […]
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்போருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 30/07/21 ம் தேதி உசிலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த பாக்கியராஜ் வயது 36, த/பெ. சந்திரன், வெள்ளைமலைப்பட்டி, உசிலம்பட்டி தாலுகா, மதுரை, இளங்கோ என்ற இளங்கோவன் வயது 32/21, த/பெ.யோசனாய், வெள்ளைமலைப்பட்டி, உசிலம்பட்டி தாலுகா, மதுரை, ஆகியோர் கைது செய்யப்பட்டு […]
30.08.2021 இன்று காலை OMR பெருங்குடி சுங்கச்சாவடி சாலையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது J9 துரைப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.விஜயன்( சட்டம் ஒழுங்கு) அவர்கள் சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கு கொரோனா பாதுகாப்பு மற்றும் அறிவுரைகள் வழங்கி கலந்துகொண்ட வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
30.08.2021இன்று காலை OMR பெருங்குடி சுங்கச்சாவடி சாலையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது J9 துரைப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.விஜயன்( சட்டம் ஒழுங்கு) அவர்கள் சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கு கொரோனா பாதுகாப்பு மற்றும் அறிவுரைகள் வழங்கி கலந்துகொண்ட வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இன்று காலை 5.30.மணியளவில் OMR பெருங்குடி சுங்கச்சாவடி சாலையில் கலைஞர் நினைவு 2021 மாரத்தான் போட்டி நடைபெற்றது.இப்போட்டியை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அரவிந்ரமேஷ் தொடங்கி வைத்தார்.இப்போட்டி சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் அளவு நிர்ணயிக்கப்பட்டது. இதில் […]