Police Department News

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு அதிநவீன தோள்பட்டை கேமராக்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு அதிநவீன தோள்பட்டை கேமராக்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (17.08.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினர் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் முதற்கட்டமாக 7 காவல் நிலையங்களில் பணிபுரியும் 21 காவலர்களுக்கு அதிநவீன தோள்பட்டை கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் வழங்கினார்கள்.

Police Department News

மதுரை மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஸ்டீபன் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஸ்டீபன் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில்,கஞ்சா,கள்ளச் சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி, விற்பனை செய்து வந்த சமூக விரோதிகளை கண்டறிந்து இந்தாண்டு மட்டும், சுமார் 300 கிலோ கஞ்சா,200 கிலோ குட்கா உள்ளிட்ட போதைவஸ்து பொருட்களை கைப்பற்றி,எதிரிகளை கைது செய்த மதுரை மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஸ்டீபன் அவர்களது பணியை பாராட்டி, […]

Police Department News

சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசியக்கொடி ஏற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்

சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசியக்கொடி ஏற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பல்வேறு துறைகள் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 51 ஆயிரத்து 901 மதிப்பிலான நலத்திட்ட வழங்கப்பட்டன. 73 போலீசார் உட்பட 465 ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் எஸ்பி செந்தில்குமார், டிஆர்ஓ மணிவண்ணன், திட்ட இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Police Department News

மதுரை திருநகர் பகுதியில் பணம் வைத்து சீட்டாடியவர்கள் கைது, திருநகர் போலீசார் நடவடிக்கை

மதுரை திருநகர் பகுதியில் பணம் வைத்து சீட்டாடியவர்கள் கைது, திருநகர் போலீசார் நடவடிக்கை மதுரை, திருநகர் W1, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு கனேசன் அவர்கள் சக காவலர்களுடன் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக 16/08/21 பகல் சுமார் 4 மணியளவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது விளாசேரி கண்மாய் அருகே சிலர் வட்டமாக அமர்ந்து ஜெயிக்குது, தோக்குது என பணம் வைத்து வெட்டுச்சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர், அவர்களை […]

Police Recruitment

சுதந்திர தின விழா- முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்;

சுதந்திர தின விழா- முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்; சுதந்திர தின விழா- முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்;தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்-அமைச்சர், அங்கிருந்தபடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மூவர்ண […]

Police Department News

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 29 நபர்கள் கைது.

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 29 நபர்கள் கைது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து 10.08.2021-ம் தேதி முதல் 15.08.2021 தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 29 நபர்களை TNP Act -ன் கீழ் கைது செய்தனர். மேலும் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை அமோகம்!! வழிப்பறி கும்பல்கள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை அமோகம்!! வழிப்பறி கும்பல்கள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியில் உப்பளம், விவசாயம், தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். இங்கு ஏராளமான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களை மையப்படுத்தி கஞ்சா வியாபாரிகள் இந்தப் பகுதியில் குவிந்து வருகின்றனர்முள்ளக்காடு ஊரின் பல பகுதிகளில் சரி வர தெரு மின்விளக்குகள் எரியாத காரணத்தினால், கஞ்சா வியாபாரிகளுக்கும், கஞ்சா பிரியர்களுக்கும் மிகுந்த […]

Police Department News

பிரபல கொள்ளையன் கைது: நகைகள் மீட்பு

பிரபல கொள்ளையன் கைது: நகைகள் மீட்பு கடந்த 2 மாதங்களாக புளியம்பட்டி, நாரைக்கிணறு மற்றும் கழுகுமலை ஆகிய காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருந்தது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர் மேற்பார்வையில் புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் தலைமையில் எஸ்.ஐ. செல்வன், எஸ்.எஸ்.ஐ. பொன்முனியசாமி, முதல்நிலைக் காவலர்கள் கொடிவேல், […]

Police Department News

தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நேரடி உதவி ஆய்வாளர்களின் மனக்குமுறலுக்கு தீர்வு காண்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நேரடி உதவி ஆய்வாளர்களின் மனக்குமுறலுக்கு தீர்வு காண்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக காவல்துறையில் சார்நிலை ஊழியர் மற்றும் உயர் அதிகாரி என்ற இரண்டு கட்டமைப்பு உள்ளது. இதில் சார் நிலை ஊழியர் என்பது இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் என்பது துணை காவல் கண்காணிப்பாளர்/உதவி காவல் கண்காணிப்பாளர் முதல் காவல்துறை தலைமை இயக்குனர் வரை உள்ளடக்கியது. இதில் உயர் அதிகாரிகளுக்கான பதவி […]

Police Department News

கொலை குற்றவாளிகள் கைது; எஸ்.பி. பாராட்டு

கொலை குற்றவாளிகள் கைது; எஸ்.பி. பாராட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபாண்டவர் மங்கலம் பகுதியை சேர்ந்த தாமோதர பாண்யடியன் மகன் கனகராஜ் (38) என்பவரை கடந்த 14ம் தேதி இரவு அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் இதை தடுக்க சென்ற கனகராஜின் தாயார் பார்வதி (59) என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பார்வதி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]