காவல்துறையில், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.,) பதவிகளுக்கு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்படவில்லை. இப்பதவிகள் தலைமை காவலர் பதவியிலிருந்து நிலை உயர்த்தப்பட்ட பதவி. இவர்கள் தலைமை காவலர்களாகவே கருதப்படுவர். தலைமை காவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரமே எஸ்.எஸ்.ஐ.,க்கும் பொருந்தும். தலைமை காவலருக்கும், எஸ்.ஐ.,க்கும் உள்ள வேறுபாடே எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கு உள்ள அதிகார வேறுபாடாகும். எஸ்.ஐ., பொதுவாக காவல் நிலைய அதிகாரியாவார். பெரிய ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் காவல் […]
Day: August 6, 2021
வட இந்தியாவில் தொலைந்த மூதாட்டி தென் இந்தியாவில் தமிழகத்தில் நமது மதுரையில் மீட்கப்பட்டு மீண்டும் குடும்பத்தினருடன் பத்திரமாக முதியோர் இல்லத்தினரால் சேர்த்து வைக்கப்பட்டார். நன்றி திருப்பரங்குன்றம் போக்குவரத்து S.S.I
வட இந்தியாவில் தொலைந்த மூதாட்டி தென் இந்தியாவில் தமிழகத்தில் நமது மதுரையில் மீட்கப்பட்டு மீண்டும் குடும்பத்தினருடன் பத்திரமாக முதியோர் இல்லத்தினரால் சேர்த்து வைக்கப்பட்டார். நன்றி திருப்பரங்குன்றம் போக்குவரத்து S.S.I மத்திய பிரதேசம் இந்தோர் நகரில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவு வழிதவறி கடந்து வந்த பாட்டி ரெகமத் அலீனா (70) மதுரை திருநகரில் ஆதரவின்றி மிகவும் மோசமான தோற்றத்தில் சாலையில் அமர்ந்தபடி இருந்தார். இதை கண்ட குழந்தை நல ஆர்வலர் திருமதி மாரீஸ்வரி அவர்கள் நமது […]
மதுரை, S.S.காலனி காவல்நிலைய எல்லைக்குடபட்ட பகுதியில், குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
மதுரை, S.S.காலனி காவல்நிலைய எல்லைக்குடபட்ட பகுதியில், குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன மதுரை மாநகர் S.S.காலனி C 3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுப்பதற்காகவும், குற்ற்செயலில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும் TVS நிறுவனம் சார்பாக சம்மட்டிபுரம் பகுதியில் 11 கேமராக்களும், HMS காலனி பகுதியில் 19 கேமராக்களும், பொருத்தப்பட்டு அவற்றை கண்காணிப்பதற்காக மதுரை TVS ரப்பர் கம்பெனி அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் CCTV கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி CCTV […]
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 2 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருநங்கைகள்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 2 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருநங்கைகள் நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர், ராதாபுரம் வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று வள்ளியூர் அருகே காமராஜ் நகர் […]
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போக்குவரத்து ஒழுங்கு பணிக்கு இரு சக்கர ரோந்து வாகனத்தை துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போக்குவரத்து ஒழுங்கு பணிக்கு இரு சக்கர ரோந்து வாகனத்தை துவக்கி வைத்தார் *காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தினை சீராக இருக்கும்பொருட்டும் பொன்னேரிக்கரையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரையிலும் , அதேபோல் பெரியார் நகர் முதல் மூங்கில் மண்டபம் வரை இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலைகளில் தன்னிச்சையாக நிறுத்துவதை தடுப்பதற்காக புதிய இரு சக்கர இரண்டு போக்குவரத்து ரோந்து வாகனங்களை […]
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் எல்லைகுட்பட்ட, பகுதியில்,கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
தூத்துக்குடி மாவட்டம்ஆத்தூர் காவல் நிலையம் எல்லைகுட்பட்ட, பகுதியில்,கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது ஆத்தூர், நரசன்விளை கண்ணகி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருள்குமார் வயது 55 இவருக்கும் நரசன்விளை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ் வயது என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 04.08.2021 நரசன்விளை பகுதியில் கோவில் கொடை விழாவில் ஆடு வெட்டும் பொழுது அருள்குமாருக்கும், விக்னேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், அருள்குமாரை கத்தியால் […]
மனநலம் குன்றி சாலையில் திரிபவர்களை காப்பகத்தில் ஒப்படைக்கும் காவல் துறை
மனநலம் குன்றி சாலையில் திரிபவர்களை காப்பகத்தில் ஒப்படைக்கும் காவல் துறை தஞ்சாவூர் மாவட்டத்தில் மனநலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சாலையில் திரிபவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராக பொறுப்பேற்ற பாலகிருஷ்ணன் அண்மையில் காவல் துறையினருக்கு பல்வேறு புத்தாக்கப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். அப்போது, மனநலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சாலையில் திரிபவர்களை மீட்டு, உரிய காப்பகத்தில் காவல் துறையினர் ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை […]
போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா வெற்றி
போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா வெற்றி போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா வெற்றி வாகை சூடினார். போலீஸ்துறையில் பணியாற்றுவது எனது கனவு என்று பேட்டியளித்துள்ளார். தமிழக போலீஸ்துறையில் ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் போன்ற பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடந்து […]
மதுரை, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த மனநலம் பாதித்த மூதாட்டியை காணவில்லை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த மனநலம் பாதித்த மூதாட்டியை காணவில்லை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகின்றனர் மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சோலை அழகுபுரம் 3 வது தெருவில் வசிக்கும் கரீம் பாய் மனைவி மும்தாஜ் வயது 40/21, இவர் தனது தாய் ஜெய்துன்பீபி வயது 75,/21, மற்றும் மகன் சதாம் உஷேன் மருமகள் பிஸ்மிநிஷா ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் வசித்து வருகிறார். இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இவரை விட்டு வேறு […]
தமிழகம் முழுவதும், 1120 போலீசார் அதிரடி மாற்றம். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
தமிழகம் முழுவதும், 1120 போலீசார் அதிரடி மாற்றம். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக எஸ்.பி.,கள் முதல் டி.ஜி.பி.,கள் வரை மாற்றம் செய்யப்பட்டனர், இந்த நிலையில் புதிய டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் காவலர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு மாற்றம் கேட்டு பல மாதங்களாக காத்திருந்தனர். காவலர்களை பொறுத்தவரை, மாவட்டங்களுக்குள் […]