மேலூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் மேலூரில் பேங்க் ரோட்டில் வாடகைக்கு வீடு பிடித்து சாலையோரம் பழ வியாபாரம் வசித்து வருகிறார். இவரது மகன் அண்ணாமலை (வயது20). இவர் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு சிவில் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனக்கு ஸ்மார்ட் செல்போன் வாங்கித் தரும்படி வீட்டில் கேட்டுள்ளார். பெற்றோர் வாங்கி […]
Month: April 2023
விபத்தில் இறந்த சிறுமியின் கண்கள் தானம்
விபத்தில் இறந்த சிறுமியின் கண்கள் தானம் மதுரை மேல பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் அடோசென்டன். இவரது மனைவி அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் செடோரா(வயது 9) 4-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தினர். கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு செடோரா மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் வெளியே சென்றார். அப்போது கார் மோதியதில் செடோரா பரிதாபமாக இறந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை […]
ஆடிட்டர் உள்பட 3 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி- அரசு பள்ளி ஆசிரியரிடம் விசாரணை
ஆடிட்டர் உள்பட 3 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி- அரசு பள்ளி ஆசிரியரிடம் விசாரணை மதுரை கோச்சடையில் உள்ள தேனி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். ஆடிட்டரான இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கார் டிரைவர் விவேகானந்தராஜா மூலம் உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. […]
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பறிமுதல்- ஐஜி ஆசையம்மாள் தகவல்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பறிமுதல்- ஐஜி ஆசையம்மாள் தகவல் ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி […]
திண்டுக்கல்கொடைக்கானலில் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சென்னை வாலிபர் மரணம்- போலீசார் தீவிர விசாரணை
திண்டுக்கல்கொடைக்கானலில் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சென்னை வாலிபர் மரணம்- போலீசார் தீவிர விசாரணை சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வர் (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்சர்வேட்டரி வனப்பகுதியில் உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் அப்பகுதியில் விறகு எடுக்க சென்ற பெண்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஜெகதீஸ்வரை மீட்டு கொடைக்கானல் […]
ஆன்லைன் வேலை : கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் மோசடி கும்பல் – சைபர் கிரைம் எச்சரிக்கை
ஆன்லைன் வேலை : கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் மோசடி கும்பல் – சைபர் கிரைம் எச்சரிக்கை ஆன்லைனில் வேலை தேடும் கல்லூரி மாணவிகள் மற்றும் படித்த குடும்ப தலைவிகளை குறி வைத்து மோசடி செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி விட்டது. படித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்வி த்தகுதியின் அடிப்படையில் வேலைகள் கிடைப்ப தில்லை. இதனால் இளைஞர்கள் கிடைத்த வேலையை […]
சென்னை கே.கே.நகர் விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலையில் 6 பேர் கைது
சென்னை கே.கே.நகர் விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலையில் 6 பேர் கைது சென்னை கே.கே. நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குட்டி (வயது40). ரவுடியான இவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு சென்ற போது ரமேசை, காரில் வந்த […]
முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்- அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு
முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்- அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் என மின்வாரியம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.) வருகை தரும் இடங்களில் பராமரிப்புக்காக மின்தடை செய்யக் கூடாது என்றும், தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் பலமுறை […]
மதுரை சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்கள் – இறந்த மகன் நினைவாக இருந்த புத்தங்களையும் வழங்கிய பெண்
மதுரை சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்கள் – இறந்த மகன் நினைவாக இருந்த புத்தங்களையும் வழங்கிய பெண் மதுரை மத்திய சிறை, பாளையங்கோட்டை சிறையில் கைதிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரியின் முயற்சியால் நூலகத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் கைதிகளுக்கு தினமும் விரும்பிய புத்தகங்களை வழங்கி, வாசிக்க வைக்கின்றனர். இதன்படி மதுரை, பாளையங்கோட்டை சிறைகளுக்கு புத்தகங்களை சேகரிக்க, இலக்கு நிர்ணயித்து அதற்கான முயற்சியில் மதுரை சிறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் பரசுராமன் […]
கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு- அதிகாரிகள் நடவடிக்கை
கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு- அதிகாரிகள் நடவடிக்கை கோவை மாநகராட்சியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள், பூங்காக்கள் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 22 வார்டு ராமகிருஷ்ணா லே-அவுட் பகுதியில் சுமார் 40 சென்ட் இடம் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. இந்த இடம் மாநகராட்சியின் பூங்காக்கு சொந்தமான இடமாகும். இதனை அடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு […]