சாலை விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பிய காவல்துறையினர் கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை ரோந்து காவலர்களான சிறப்பு உதவி ஆய்வாளர் திரு காதர்செரீப், முதல்நிலைக் காவலர் திரு. ராஜு, காவலர் திரு. ஹேம்நாத்குமார் ஆகியோர்கள் உடனடியாக ஓட்டுநரை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
Month: January 2021
மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மனித நேயத்துடன் உதவிக்கரம் நீட்டிய காவலர்
மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மனித நேயத்துடன் உதவிக்கரம் நீட்டிய காவலர் திருவண்ணாமலை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே மனநிலை பாதிக்கப்பட்டு ஆடையின்றி இருந்த நபருக்கு ஆயுதப்படை காவலர் திரு. இளஞ்செழியன் அவர்கள் புத்தாடை வாங்கி அணிவித்தார் மேலும் அவருக்கு உணவு வாங்கி கொடுத்து உதவிகரம் நீட்டினார். காவலரின் இந்த தன்னலமற்ற மனிதநேய செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு, கடும் குளிருக்கு சாலையோர மக்களுக்கு போர்வைகளை வழங்கிய காவலர்
இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு, கடும் குளிருக்கு சாலையோர மக்களுக்கு போர்வைகளை வழங்கிய காவலர் திருச்சி மாநகரப் பகுதியில் கடும் குளிருக்கு சாலையோரத்தில் உறங்கும் மக்கள் படும் துயரத்தை கண்ட ஆயுதப்படை காவலர் திரு. அரவிந்த் அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட போர்வைகளை இரவு நேரங்களில் அவர்களுக்கு வழங்கி தன்னால் இயன்ற உதவியை செய்துள்ளார். இச்செயலை பார்த்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர் மற்றும் காவல் துறை மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
மதுரை மாநகரில், போக்குவரத்துகாவல்துறை அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுக்கள்
மதுரை மாநகரில், போக்குவரத்துகாவல்துறை அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுக்கள் நேற்று 6 ம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணத்தால் திருப்பரங்குன்றம் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர், இதனால் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் மற்றும் பழங்காநத்தம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.லிங்கம்சாமி ஆகிய இருவரும் சேர்ந்து இன்று காலை போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படுமாறு இருந்த பள்ளங்களை தங்களின் சொந்த முயற்சியினால் டிராக்டர் மூலமாக […]
போக்குவரத்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
போக்குவரத்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு நேற்று 06/01/2021, ம் தேதி இரவு பெய்த கன மழையின் காரணமாக கீழமாசி வீதி, கீழவெளிவீதி சந்திப்பில் உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர், இதனால் தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் , மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு. உக்கிரபாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து இன்று காலை போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பள்ளங்களை […]
மதுரை மாநகரில் சட்ட விரோதமாக நேற்று மது விற்பனை செய்த 8 பேரை கைது செய்த போலீசார் 56 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்
மதுரை மாநகரில் சட்ட விரோதமாக நேற்று மது விற்பனை செய்த 8 பேரை கைது செய்த போலீசார் 56 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் மதுரை மாநகர் பகுதிகளில் மது கடைகள் திறப்பதற்கு முன்பாகவே சட்டவிரோதமாக டீ கடைகள், பொது இடங்களில் மது விற்பனை செய்த 8 பேரை நேற்று மதுரை மாநகர் காவல் துறை தரப்பில் கைது செய்யபபட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள […]
மக்களின் புகார்களை விரைந்து முடிக்கும் சென்னை பெருநகர காவல் துறையினர்.
J6 திருவான்மியூர் காவல் நிலையம் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் செல்போன் பறிப்பு குற்றங்களை முற்றிலும் தடுக்க வேண்டி அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ் குமார் அகர்வால் இ .க .பா அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு .தினகரன் இ. கா. பா அவர்கள் மற்றும் (தெற்கு )மண்டல இணை ஆணையாளர் […]
மதுரை தெப்பக்குளம் B3, காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர்
மதுரை தெப்பக்குளம் B3, காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர் மதுரை மாநகர் தெப்பகுளம் B3, காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் தல்லாகுளம் குற்றபிரிவுக்கு மாற்றப்பட்டார், கூடல் புதூர் காவல் நிலையத்தையும் கூடுதலாக கவனிப்பார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இளஞ்செழியன் இங்கு தெப்பகுளம் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டார். என மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் கால் பதிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள்
நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் கால் பதிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் புதுக்கோட்டை மாவட்டம் சம்பட்டி விடுதி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. வீரமுத்து அவர்களின் மகள் செல்வி திரிஷா அவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. செல்வி திரிஷா அவர்களுக்கு தமிழக காவல் துறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள்.
விபத்தை தடுக்கும் பொருட்டு சாலையை சீர் செய்த காவலர்கள்
விபத்தை தடுக்கும் பொருட்டு சாலையை சீர் செய்த காவலர்கள் திருவாரூர் − நாகை மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவலறிந்த திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் பள்ளத்தை சீர் செய்யும் பொருட்டு காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலையை சீர் செய்தனர். இச்செயலை கண்ட […]