ரோந்து பணியின் போது ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது,காவலருக்கு குவியும் பாராட்டுக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருகோவிலூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. வீரபத்திரன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருக்கும் போது கீழத்தாழனூர் TKT பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 63 சிப்பம் ரேஷன் அரிசி இருப்பதை பார்த்து திருகோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவத்தார். உடனடியாக […]
Day: January 6, 2021
சைபர் கிரைம் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையினால் 120 செல் போன்கள் மீட்பு
சைபர் கிரைம் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையினால் 120 செல் போன்கள் மீட்பு தேனி மாவட்டத்தில், செல் போன் காணாமல் போனதாக காவல் நிலையங்களில் பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தமாக அதிரடி நடவடிக்கையை தொடங்கிய தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு தொலைந்து போன 120 செல் போன்களை கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரக்காடு அல்லிமேடு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச் சென்றார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்தவரும், உறவினருமான இளைஞர், அவரைப் பின்தொடர்ந்து கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண், இளைஞரிடமிருந்து கத்தியைப் பிடுங்கி, தற்காப்புக்காக இளைஞரை கத்தியால் […]
தற்கொலைக்கு முயன்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபரை பத்திரமாக மீட்டு குடும்பத்தினரின் கண்ணீரை துடைத்த தலைமை காவலருக்கு பாராட்டு
தற்கொலைக்கு முயன்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபரை பத்திரமாக மீட்டு குடும்பத்தினரின் கண்ணீரை துடைத்த தலைமை காவலருக்கு பாராட்டு கோவை மாவட்டம் ஆழியார் அணையில் குதிக்கும் நோக்கத்தில் ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து அலுவலில் இருந்த தலைமை காவலர் திரு. பிரபு அவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டு விசாரணை செய்ததில் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்பதும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு மனவிரக்தியில் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு […]
2021−புதிய வருடப் பிறப்பை குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய காவல் துறை
2021−புதிய வருடப் பிறப்பை குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய காவல் துறை தர்மபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அண்ணாதுரை அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் திரு. ரத்தினக்குமார், மற்றும் திரு. ரெங்கசாமி ஆகியோர் 2021 புதிய வருடப்பிறப்பை முன்னிட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர், மேலும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கருணை உள்ளத்தோடு செயல்பட்ட காவல் துறையினருக்கு பொது மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
காணாமல் போன 2 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்
காணாமல் போன 2 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் )13 வயது சிறுமி தனது சித்தியின் 8 வயது மகளுடன் சேர்ந்து வெளியெ சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் துறையினர் சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன் சிறுமியின் செல்போன் சிக்னலை கண்காணித்ததில் பெருங்குளத்தூர் வழியாக இரயிலில் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இரயிலில் பயணித்த திருநங்கை ஒருவர் […]
பொதுமக்களின் பாராட்டை பெற்ற அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
பொதுமக்களின் பாராட்டை பெற்ற அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று 5 தேதி மதுரை மாநகர் அவணியாபுரம் பெரியார் சிலை அருகில் உள்ள சாலையில் மழையின் காரணத்தால் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர் போக்குவரத்துக்கு இடையூறாகவும் ,விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்த இந்த பள்ளத்தை அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில் குமார் அவர்கள் jcb மூலம் பள்ளத்தை நிரப்பி பொதுமக்கள் சாலையில் சாரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி […]
மதுரை, தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் தல்லாகுளம் குற்றப்பிரிவுக்கு மாற்றம்
மதுரை, தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் தல்லாகுளம் குற்றப்பிரிவுக்கு மாற்றம் டி.எஸ்.பி. மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்பட 9 பேரை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. நேற்று உத்தரவு. தமிழகத்தில் 9 டி.எஸ்.பி.களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் டி.எஸ்.பி.பேச்சி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், ராமநாதபுரம் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. சரவணன் பெரம்பலூர் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்ட டி.எஸ்.பி. வினோத் , விருதுநகர் மாவட்டத்திற்கும், சிவகங்கை டி.எஸ்.பி. சந்திரன் திண்டுக்கல் மாவட்டத்திற்கும், […]
காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்ட காவல் துறையினர்
காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்ட காவல் துறையினர் திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.பதுருன்னிசாபேகம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் கடந்த 5 மாதங்களில் சுமார் 58 குழந்தைகளை மீட்டுள்ளனர். தனிப்படையினருக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இ நியூஸ் சார்பாகவும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்ளுகிறோம்.
நீட் தெர்வில் வெற்றி பெற்று மருத்துவதுறையில் கால்பதிக்கும் காவல் சொந்தங்கள்
நீட் தெர்வில் வெற்றி பெற்று மருத்துவதுறையில் கால்பதிக்கும் காவல் சொந்தங்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவதுறையில் கால்பதிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ராஜா அவர்களின் மகன் ஹரிசூரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கதிரவன் அவர்களின் மகள் செல்வி யாழினி, தலைமை காவலர் திரு. கரம்சந்த் மோகன்தாஸ் அவர்களின் மகன் திரு. நரேந்திரன் ஆகியோருக்கு தமிழக காவல் துறை சார்பாக வாழ்த்து தெரிவித்து கொண்டனர், நமது போலீஸ் இ நியூஸ் சார்பாகவும் நல்வாழ்த்துகள்