கடலூரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் தலைமையிலான போலீசார் இன்று காலை கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கடலூர் முதுநகர் பென்சனர் தெருவை சேர்ந்த புகழேந்தி (வயது 40) […]
Month: May 2023
கள்ளச்சாராயம் ஒழிக்க திருச்சி மாநகருக்கு பிரத்யேக அலைபேசி எண் அறிவிப்பு
கள்ளச்சாராயம் ஒழிக்க திருச்சி மாநகருக்கு பிரத்யேக அலைபேசி எண் அறிவிப்பு தமிழக முதல்வர் உத்தரவின் பேரிலும், தமிழக காவல்துறை இயக்குநர் மேலான அறிவுறுத்தலின் பேரிலும் தமிழகம் முழுவதும் கள்ளசாராயம், போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் கள்ளசாராயம் விற்பனை மற்றும் கள்ளசந்தையில் மதுபானம் விற்பனையை தடுக்கவும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் பாபநாச பெருமாள். இவரது மகன் மாணிக்க வாசகம் (வயது 21). பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு பாவூர் சத்திரத்தில் உள்ள டீக்கடை யில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தந்தை பாபநாச பெருமாள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் மாணிக்கவாசகம் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மனவிரக்தியில் இருந்து வந்த […]
விருதுநகர் கள்ள சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்த போலீசார்
விருதுநகர் கள்ள சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்த போலீசார் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கள்ள சாராயத்தை ஒழிக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்துள்ளது. வடமாவட்டங்களில் தற்போது கள்ள சாராய விற்பனை இருக்கும் நிலையில் தென் மாவட்டங் […]
மதுரையில் வாளை காட்டி மிரட்டியவர் கைது
மதுரையில் வாளை காட்டி மிரட்டியவர் கைது மதுரை மீனாட்சிநகர் கேட்லாக்ரோடு ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் சுந்தரபாண்டியன் (20). இவர் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு 7-வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அவரை 2 பேர் வழிமறித்து வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு பாண்டி மகன் வீரபூமு, அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் பாண்டி என்ற பாண்டியராஜன் (47) ஆகிேயார் மீது […]
மதுரையில் வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது
மதுரையில் வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது மதுரை ஆனையூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது54). சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த செயின் மற்றும் மோதிரம் உள்பட 8 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து முருகன் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீடு புகுந்து நகை திருடிய தெப்பக்குளம் மருது பாண்டியர் தெரு பாஸ்கரன், […]
மதுரையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உண்ணாவிரதம்
மதுரையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உண்ணாவிரதம் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தமிழ்நாடு கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், மகுடம் சக்தி, ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் தொலை தொடர்பு ஆணையம் டிராய் அமைப்பு என்.டி.ஓ.3 பரிந்துரையின் பேரில் கட்டண சேனல்கள் மிக கடுமையான கட்டண […]
சிவகங்கை மாவட்டத்தில் பணத்துடன் உண்டியலை திருடிச்சென்ற கொள்ளையன்
சிவகங்கை மாவட்டத்தில் பணத்துடன் உண்டியலை திருடிச்சென்ற கொள்ளையன் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி- வேங்கை பட்டி ரோட்டில் தனியா ருக்கு சொந்தமான கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா சன்னதியும் உள்ளது. இங்கு ஒரு அடி உயரத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இதில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் கோவிலை வழக்கம் போல் மூடிவிட்டு கோவில் ஊழியர்கள் சென்று விட்டனர். […]
பழனியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு முகாம்
பழனியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு முகாம் கொடைக்கானல் வனக்கோட்டம், பழனி வனச்சரகத்தின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பழங்குடியினர் வசிக்கும் இடங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம வனக்குழு மக்களை தேர்வு செய்து அந்தந்த கிராமங்களில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வனப்பகுதியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பேணி காப்பது, தீயிலிருந்து வனத்தை காப்பாற்றுவது, வேட்டைகளில் இருந்து வன உயிரினங்களை காப்பாற்றுவது போன்ற […]
மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய MLA
மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய MLA தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர்கே .பி அன்பழகன் MLA அவர்கள் வழிகாட்டுதலோடு அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சி மல்யுத்த பகுதியில் சிறுபாலம் அமைக்கவும், சித்தேரி ஊராட்சி மலைவாழ் மக்களுக்கு பட்டா, வீடு ,ஆடு ,மாடு மின் இணைப்பு வழங்கவும், பட்டுக்கோணம்பட்டிகாளிப்பேட்டை பொதுமக்களுக்கு பட்டா வழங்கவும் ,மத்தியம்பட்டி ஊராட்சியில் இருளர் இன மக்களுக்கு மயான கூடம், மயான பாதை அமைப்பது தொடர்பாகவும் […]