Police Department News

ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது.

ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை, அவரவர் பணியாற்றும் காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடை பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் […]

Police Department News

3 வருடமாக காணாமல் போன சிறுமியை கண்டு பிடித்துக் கொடுத்த காவலருக்கு பாராட்டு

3 வருடமாக காணாமல் போன சிறுமியை கண்டு பிடித்துக் கொடுத்த காவலருக்கு பாராட்டு திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலையம் குற்ற எண் 1271/2017 US Girl Missing காவல் துறை கூடுதல் இயக்குனர் உயர்திரு.திருமதி.சீமா அகர்வால் (இ.கா.ப) அவர்கள் உத்தரவின் பெயரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன்(இ.க.ப) அவர்கள் மேற்பார்வையில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.க.சுரேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் மாநகர காவல் கூடுதல் துணை ஆணையர் உயர்திரு.மோகன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு […]

Police Department News

கொரோனா பரவலை தடுக்க, முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவோரை போட்டோ எடுத்து அனுப்ப மதுரை காவல் ஆணையர் அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க, முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவோரை போட்டோ எடுத்து அனுப்ப மதுரை காவல் ஆணையர் அறிவிப்பு கொரோனா பரவலை தடுக்க மதுரை நகரில் முகக்கவசம் அணியாதவர்களை அவர்களின் இருப்பிடத்துடன் போட்டோ, அல்லது வீடியோ எடுத்து அனுப்பினால் முகக்கவசம் அணியாதவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அறிவித்துள்ளார். மதுரை மாநகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்கள் […]

Police Department News

கடும் மூச்சுத்திணறல்; நடக்கவே முடியாத நிலைமை; சித்த மருத்துவம் மூலம் கரோனாவில் இருந்து மீண்ட காவல் உதவி ஆய்வாளரின் அனுபவம்

காவல் உதவி ஆய்வாளர் டீக்காராமன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 58 வயதான காவல் நிலைய உதவி ஆய்வாளர் டீக்காராமனும், அவரது 33 வயது மகனும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மகனுக்கு அறிகுறிகளே இல்லாமல் உடல்நிலை சீராக இருந்த வேளையில், உதவி ஆய்வாளருக்கு மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. கடுமையான மூச்சுத்திணறல், நாள்பட்ட நீரிழிவு நோய் இருந்தும், சித்த மருத்துவ சிகிச்சை மூலம் டீக்காராமன் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார். சென்னை, ஜவஹர் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கரோனாவுக்கான சித்த […]

Police Department News

சென்னையில் பாலியல் தொழில் ஈடுபட்ட 5 பேர் கைது..!!

சென்னையில் பாலியல் தொழில் ஈடுபட்ட 5 பேர் கைது..!! சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறு துணை ஆணையர் விக்ரமனின், செல்போன் எண்ணிற்கு வந்த புகாரை தொடர்ந்து அவர்,  துரைப்பாக்கம் போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் விசாரணையில், குடியிருப்பில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை மிரட்டி பாலியல் தொழில் செய்து வந்ததை உறுதி செய்த போலீசார், தரகர்கள் அசோக், ஹேம துல்லா, ராஜராஜன், ஏசுதாஸ், […]

Police Department News

தப்பிய கைதியை ட்ரோன் மூலம் தேடிய காவல்துறை..!! முடிவுக்கு வந்த 14 மணிநேர பதற்றம்..!!

தப்பிய கைதியை ட்ரோன் மூலம் தேடிய காவல்துறை..!! முடிவுக்கு வந்த 14 மணிநேர பதற்றம்..!! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் மகளான 7 வயதுச் சிறுமி, பூ வியாபாரி ராஜா என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்ததால், ராஜா மீது போலீஸார் போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, […]

Police Department News

துப்பாக்கி, தோட்டா, கத்திகளுடன் காரில் வந்த 3 ரவுடிகள் கைது,பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!!

துப்பாக்கி, தோட்டா, கத்திகளுடன் காரில் வந்த 3 ரவுடிகள் கைது,பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துப்பாக்கி, தோட்டா, பட்டாக்கத்திகளுடன் காரில் வந்த 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக கோவில்பட்டி டிஎஸ்பி தெரிவித்துள்ளார். விருதுநகர்-தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஈரோட்டிலிருந்து நெல்லை நோக்கி சென்ற காரை மடக்கி அதில் இருந்த, ஒரு துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 2 பட்டாக்கத்திகள், 5 […]

Police Department News

திருப்பூர் மாநகரம் தெற்கு காவல் நிலையம் 16-07-2020

திருப்பூர் மாநகரம் தெற்கு காவல் நிலையம் 16-07-2020 திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் நவீன் குமார் என்பவர் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருக்கும்போது திடீரென்று வலிப்பு நோய் வந்து ரோட்டில் கீழே விழுந்து கிடந்த அவரை அவ்வழியாக சென்ற ரோந்து காவலர் தினேஷ்குமார் (கா எண் 867) மற்றும் TSP NK 7750 என்பவர்கள் அவரை எழுப்பி அவருக்கு முதலுதவி சிகிச்சை […]

Police Department News

மதுரையில் பட்டபகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வெட்டி படு கொலை, நகை, பணம் கொள்ளை

மதுரையில் பட்டபகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வெட்டி படு கொலை, நகை, பணம் கொள்ளை மதுரையில் பட்டப் பகலில், பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வெட்டி படுகொலை செய்து, நகை 5 பவுன், மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதுரை மாநகர் SS காலனி C3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பழங்காநத்தம், பைபாஸ் ரோடு, நேரு நகரில் உள்ள பாலாஜி தெருவில் தங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். […]

Police Department News

நண்பனின் பிறந்த நாள் மது விருந்தில், பில்டிங் காண்டிராக்டர் கொலை

நண்பனின் பிறந்த நாள் மது விருந்தில், பில்டிங் காண்டிராக்டர் கொலை மதுரை மாவட்டம், சுப்ரமணியபுரம், C2. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான டி.பி.கே. மெயின் ரோடு, பைகரா, MGR சிலை பின் பக்கம் உள்ள ஊரணி மேடு, ரயில்வே காம்பவுண்ட் சுவர் அருகில் ஒருவர் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததின் பேரில் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்களின் உத்தரவின்படி காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று […]