Police Department News

திடீர் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம், கத்தியைக் காட்டி வழிப் பறி செய்த ரவுடிகள் கைது

திடீர் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம், கத்தியைக் காட்டி வழிப் பறி செய்த ரவுடிகள் கைது மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான திடீர் நகரில் வசித்து வருபவர் மருநாயுடு மகன் கண்ணன் வயது 38/2020, இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இன்று (28/08/2020) பகல் செல்லூர் பகுதிக்கு சவாரி சென்று திரும்பும் போது சுமார் 9.30 மணியளவில் மேலமாரட் வீதி சந்திப்பிலுள்ள வாரி ஹோட்டல் முன்பாக ஆட்டோவை […]

Police Department News

கீழேகிடந்தஅலைபேசியைஉரியநபரிடம்கொண்டுபோய்சேர்த்தகாவலருக்கு_பாராட்டு

திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய ரோந்து காவலர் #திருவினோத்குமார்(கா. எண் 560) என்பவர் புதுக்காடுஎன்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கீழே அலைபேசி ஒன்று கிடந்ததை கண்ட காவலர் அலைபேசியை எடுத்து அதிலுள்ள எண்களை தொடர்புகொண்டு அலைபேசியை தவறவிட்ட புதுக்காடு பகுதியைச் சேர்ந்த #திருநீலகண்டன் என்பவரை தொடர்பு கொண்டு உரிய விசாரணை மேற்கொண்டு அலைபேசியை சந்திராபுரம் சோதனை சாவடி என்ற இடத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. இச்செயலை செய்த காவலரை மாநகர காவல் ஆணையர் […]

Police Department News

சென்னை1999 பேட்ச் காவலர்கள் சார்பில் 2 ஏட்டு குடும்பங்களுக்கு ரூ.26.4 லட்சம் நிவாரணம்: போலீஸ் கமிஷனர் வழங்கினார்

சென்னை1999 பேட்ச் காவலர்கள் சார்பில் 2 ஏட்டு குடும்பங்களுக்கு ரூ.26.4 லட்சம் நிவாரணம்: போலீஸ் கமிஷனர் வழங்கினார் சென்னை: பணியின் போது உயிரிழந்த 2 தலைமை காவலர்கள் குடும்பத்திற்கு 1999 பேட்ச் காவலர்கள் சார்பில் வசூலிக்கப்பட்ட ரூ.26.40 லட்சம் நிவாரண நிதியை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். சென்னை மாநகர காவல் துறையில் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் தேசிங்கு கடந்த ஜூலை 3ம் தேதி உயிரிழந்தார். அதேபோல், மடிப்பாக்கம் […]

Police Department News

சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன், மகனோடு சேர்த்து ஐந்து பேர் கைது

சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன், மகனோடு சேர்த்து ஐந்து பேர் கைது மதுரையில் சொத்து தொடர்பான தகராறில் தந்தையை ஓட ஓட விரட்டி கொலை செய்த மகன், மகனுடன் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்கள் கைது. மதுரை, தெற்கு வெளி வீதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணி வயது 57/2020 இவர் தனது இரண்டாவது மனைவி தனலெக்ஷிமியுடன் வசித்து வருகிறார், இவர்களுக்கு சரவணன் என்ற 3 வயது மகன் இருக்கிறான் மணி பைனான்ஸ் தொழில் செய்து […]

Police Department News

இறந்த காவலரின் மகளுக்கு உதவிய காவல் ஆணையர்

இறந்த காவலரின் மகளுக்கு உதவிய காவல் ஆணையர் சென்னை¸ புனிததோமையர் மலை உடல் நலக்குறைவால் இறந்த தலைமை காவலர் ஒருவரின் பெண் தனது குடும்பத்தை இன்னும் சில காலம் காவலர் குடியிருப்பில் தங்க வைக்க அனுமதி கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால்¸ இ.கா.ப அவர்களை அணுகினார். கோரிக்கையை பரிசீலித்து அந்த இடத்திலே ஒப்புதல் அளித்தது மட்டுமல்லாமல் சிறுமியின் கல்வி நிலை குறித்து விசாரித்து கல்லூரியில் சேர முடியாமல் தவித்த அந்த சிறுமிக்கு காவல் […]

Police Department News

வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து: மேலூரைச் சேர்ந்த ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்

வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து: மேலூரைச் சேர்ந்த ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை இருசக்கரவாகனத்தில் வந்தவர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார். கன்னிவாடி காவல்நிலையம் முன்பு இன்று காலை போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி லைசென்ஸ், முகக்கவசம் அணியாதது குறித்தும் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இருசக்கரவாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென கத்தியை எடுத்து தலைமைக் காவலர் திருப்பதியைக் குத்தினார். திருப்பதியின் தலையில் […]

Police Department News

மதுரை, சிம்மக்கல் பகுதியிலுள்ள பேச்சியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை,

மதுரை, சிம்மக்கல் பகுதியிலுள்ள பேச்சியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை, கொள்ளையர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி அடைந்த காவல் துறை மதுரை மாநகரில் பிரசித்தி பெற்ற பழங்கால ஆலயங்களில் பேச்சியம்மன் கோவிலும் ஒன்று, இங்கு பழங்கால ஐம்பொன் சிலைகள் மிகவும் புகழ் பெற்றவை, மதுரை மாநகர் சிம்மக்கல் C4, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான இந்த பேச்சியம்மன் கோவிலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஐம்பொன் சிலைகள் சுமார் 1 அடி நீளம் 2 கிலோ […]

Police Department News

தமிழக அரசின் உயா் அதிகாரிகள் இன்று திடீரென டில்லி செல்கின்றனா்

தமிழக அரசின் உயா் அதிகாரிகள் இன்று திடீரென டில்லி செல்கின்றனா். தமிழக உள்துறை முதன்மை செயலாளா் S.K.பிரபாகா்,தமிழக முதலமைச்சரின் செயலாளா் P.செந்தில்குமாா்,தமிழக போலீஸ் டிஜிபி J.K.திரிபாதி,IPS ஆகியோா் இன்று மாலை 5.05 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ்(6E-2752) விமானத்தில் டில்லி செல்கின்றனா். தமிழக அரசு தலைமை செயலாளா் சண்முகம் இன்று இரவு 7 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ்(6E-2029) விமானத்தில் டில்லி செல்கிறாா். தமிழக அரசு உயா் அதிகாரிகள் திடீரென ஒட்டுமொத்தமாக டில்லி செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police Department News

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மது போதையில் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மது போதையில் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை மதுரை மாநகர், கரிமேடு, C5, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன், இவருக்கு வயது 29, இவர் கொரோனா, தடுப்புப்பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, இவர் ஆரப்பாளையம், பிள்ளைமார் தெருவிலுள்ள பொது கழிப்பறை முன்பாக தன் சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார் அப்போது பேச்சு வார்த்தையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் […]

Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் திருமணமான 6 மாதத்தில் புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை

மதுரை, செல்லூர் பகுதியில் திருமணமான 6 மாதத்தில் புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை மதுரை மாநகர் செல்லூர், D2, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான செல்லூர், 60 அடி ரோட்டில் வசித்து வருபவர் பால்பாண்டி, இவருக்கு ஆனந்தி, நாகராணி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான ஆனந்தியை ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர், திருமணம் ஆனது முதல் கணவன் மனைவிக்கு இடையே கருத்து […]