பெண்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு தமிழ் நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் ஆணைப்படி பொதுமக்களின் நலன் கருதி அனேக இடங்களில் கொரோனா விழிப்புணர்வு நடைப்பெறுவதையொட்டி சென்னை வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .சாம் பென்னட் ஐயா அவர்கள் பெண்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு பெண்கள் மன அழுத்தத்தில் இருந்துவிடுபட யோகா பயிற்சி பற்றியும் […]
Month: August 2020
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுக்கா கருமண்டபாளையம் மலையத்தில் காவல் ஆய்வாளர் திரு கிருபானந்தம் அவர் தலைமையில் முக கவசம் கையுறை அவர் சொந்த செலவில் 500 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுக்கா கருமண்டபாளையம் மலையத்தில் காவல் ஆய்வாளர் திரு கிருபானந்தம் அவர் தலைமையில் முக கவசம் கையுறை அவர் சொந்த செலவில் 500 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரம், நான்கு சக்கரம், வாகனத்தில் வருவோர் முக கவசம் அணியாமல் போகும் வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்கும் படி ஆலோசனை விழிப்புணர்வு பற்றி கூறினார் இதனை அப்பகுதி மக்கள் நமது காவல்துறையை பாராட்டி மகிழ்ச்சியோடு முக கவசம் பெற்று கொண்டனர் … […]
திருப்பூர் மாநகரத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த காவலர் திரு.பி.வாசு அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.
திருப்பூர் மாநகரத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த காவலர் திரு.பி.வாசு அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.அவர்களது நினைவஞ்சலி மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன்(IPS) மற்றும் மாநகர துணை ஆணையர்கள் உயர்திரு.சு.செல்வகுமார் (தலைமையிடம்) மற்றும் உயர்திரு.க.சுரேஷ்குமார் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
காரியாபட்டியில் நவீன புறக்காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் திறந்து வைத்தார்
விருதுநகர் மாவட்டம்:- காரியாபட்டியில் நவீன புறக்காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலையம் சார்பில் பஸ் நிலையம் முன்பு நவீன புறக்காவல் நிலையம் அமைத்து திறப்பு விழா நடைபெற்றது. காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் பஸ் நிலையம் முன்பு பொதுமக்கள், போக்குவரத்து இடையூறுகளை சரி செய்வதற்காக புறக்காவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நகரத்தை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காரியாபட்டிக்கு தான் வந்து செல்ல […]
மதுரை மாகாளிபட்டி பகுதியை சேர்ந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு, 4 பேர் கைது.
மதுரை மாகாளிபட்டி பகுதியை சேர்ந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு, 4 பேர் கைது. மதுரை தெற்கு வாசல் B.5, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான பழைய மாகாளிபட்டி ரோடு, சாமியார் சந்து பகுதியில் வசித்து வருபவர் நந்தகோபால், இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சதீஸ்குமார் என்பவரை கொலை செய்தார். அந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவரது நண்பர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் சம்பவதன்று நந்தகோபால் அவரது வீட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தார், அப்போது 4 […]
திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு Jack என்று பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
*திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு Jack என்று பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.* திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு வெடிகுண்டு வழக்கு அலுவலுக்காக புதிதாக துப்பறியும் மோப்ப நாய் குட்டி வாங்கப்பட்டது. அதற்கு *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப* அவர்கள் இன்று 30.07.2020 *Jack* என்று பெயர் சூட்டினார். மேலும் குட்டிக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கவும், நல்ல முறையில் பராமரிக்கவும் […]
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் காவல் துறை துணைதலைவர் திரு.ராஜேந்திரன் இ.கா.ப அவர்கள் ஆய்வு நடத்தியுள்ளார்
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் காவல் துறை துணைதலைவர் திரு.ராஜேந்திரன் இ.கா.ப அவர்கள் ஆய்வு நடத்தியுள்ளார். அதுசமயம் அருப்புக்கோட்டை துணை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் மற்றும் நகர் காவல் ஆய்வாளர், அனைத்து மகளீர் காவல் நிலைய ஆய்வாளர் ஆய்வுப்பணியின்போது உடனிருந்தனர். மேலும் காவல் துறை துணை தலைவர் அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றவிதமாக காவல் துறையினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதனால் அந்தப்பகுதி முழுமையும் காவலர்கள் மட்டுமே இருந்தனர் வெளியாட்கள் மற்றும் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. […]
மதுரையில் தாய் கண் எதிரே இரண்டு மகன்கள் வெட்டி படுகொலை
மதுரையில் தாய் கண் எதிரே இரண்டு மகன்கள் வெட்டி படுகொலை மதுரையில் முன் விரோதம் காரணமாக தாய் கண் எதிரே 2 மகன்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் SS காலனி C3, காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியான எல்லீஸ் நகரை சேர்ந்தவர் வெள்ளையத் தேவன். இவரது மகன்கள் முருகன் வயது 45,/2020, வெள்ளிக்கண்ணு செந்தில் வயது 40/2020, இவர்கள் பிரபலமான ரவுடிகள், இவர்கள் இருவரின் மீதும் கொலை, […]