இருசக்கர வாகனத்தை திருடிய மூன்று நபர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர் 25.11.2020 திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு சேவுகம்பட்டியைச் சேர்ந்த கிருபாகரன்(22) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பி வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை காணாததால் அருகிலுள்ள பொதுமக்களிடம் விசாரித்ததில் மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது இதையடுத்து கிருபாகரன் உடனடியாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களுக்கு தகவல் கொடுத்தார். […]
Day: November 25, 2020
சென்னை மெரினா கடற்கரை காவல்நிலையத்தில் ஆய்வாளர் இராஜேந்திரன் தலைமையில் தயார் நிலையில் தமிழ்நாடு காவல்துறை கடலோரப்பாதுகாப்புகுழுவினர்கள் மெரினா முதல் கோவளம் வரை கடலோரப்பகுதிகள் கண்காணிப்பு.
சென்னை மெரினா கடற்கரை காவல்நிலையத்தில் ஆய்வாளர் இராஜேந்திரன் தலைமையில் தயார் நிலையில் தமிழ்நாடு காவல்துறை கடலோரப்பாதுகாப்புகுழுவினர்கள் மெரினா முதல் கோவளம் வரை கடலோரப்பகுதிகள் கண்காணிப்பு. தமிழகத்தில் இன்று மாலை துவங்கி நாளை கரையை கடக்க உள்ள நிவர் புயலின் தாக்கத்தை சமாளிக்கவும் பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாக்கவும் தமிழக அரசு அனைத்து துறைகளையும் முடக்கிவிட்டு தயார்நிலையில் வைத்துள்ளது. அதன்படி தமிழ்நாடுகாவல் துறையின் கடலோரப்பாதுகாப்பு குழுவினர்கள் மீட்பு பணியில் தமிழகம் ஈடுபட்டுவருகின்றனர்கள். சென்னை மெரினா கடற்கரையையொட்டி இயங்கிவரும் காவல்நிலையத்தில் […]
நிவர் புயல் மரக்காணத்தில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் ஆய்வு.
நிவர் புயல் மரக்காணத்தில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் ஆய்வு. நிவர் புயலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக மரக்காணம் பகுதியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் ராபீன் கேஸ்ட்ரோ தலைமையில் 45 வீரர்கள் மீட்பு பணிக்கு முகாமிட்டுள்ளனர் . இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் மரக்காணத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். […]
சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளியவர் கைது.
சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளியவர் கைது. 23.11.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சேதுராஜபுரம் பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளிய முருகன் என்பவரை SI திரு.முருகநாதன் அவர்கள் Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்தார்.