குற்றவியல் நடைமுறைச் சட்டம் CrPC 110 பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ( Habitual Offenders)இனி நாங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டோம் என்று கோட்டாட்சியர் அவர்களிடம் உறுதி அளிப்பது தொடர்பாக விவரிக்கிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு CrPC 110 . வழக்குகள் உள்ள நபர், வழக்கமாக குற்றம் செய்யும் நபர் (Habitual Offender ) இரண்டு பிரிவுக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் ஒருவர் மீது வழக்குகள் நிலுவையில் […]
Month: March 2021
மனைவி, மாமியார் டார்ச்சரினால், விஷம் குடித்த மதுரை காவலரின் கடைசி ஆசை, போலீசாருக்கு வார விடுமுறை விடுங்க
மனைவி, மாமியார் டார்ச்சரினால், விஷம் குடித்த மதுரை காவலரின் கடைசி ஆசை, போலீசாருக்கு வார விடுமுறை விடுங்க மதுரை மாநகர், அவணியாபுரம், போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பொண்ணுச்செல்வம்,வயது 35, இவர் மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றுகிறார், இவரது மனைவி குறிஞ்சிமலர் இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் பொண்ணுச்செல்வம் தனது முகநூலில் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது என் சாவுக்கு எனது மனைவியும், […]
50அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை உயிருடன்மீட்ட தீயணைப்புதுறையினர்
50அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை உயிருடன்மீட்ட தீயணைப்புதுறையினர் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே தடியமனை என்ற கிராமத்தில் சுமார் 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை புதுக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்
காவல்துறையை பற்றி தெரிந்து கொள்வோம்
காவல்துறையை பற்றி தெரிந்து கொள்வோம் காவல்துறை என்பது சுத்தமான தமிழ் சொல், அப்போ Police என்பது ஆங்கில சொல்லா என்றால் இல்லை அது பண்டைய கிரேக்க மொழி சொல். போலீஸ் என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இவற்றின் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தல், குற்றவிசாரணை புரிதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற பணிகளும் இத்துறையால் […]
மதுரை காஜிமார் தெருவில் கொலை மிரட்டல் விட்ட நபர்கள் மீது திடீர் நகர் போலீசார் வழக்கு
மதுரை காஜிமார் தெருவில் கொலை மிரட்டல் விட்ட நபர்கள் மீது திடீர் நகர் போலீசார் வழக்கு மதுரை மாநகர், திடீர் நகர், C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான காஜிமார் தெரு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் இப்ராஹிம் மகன் மீராபக்ருதீன் முன்ஷி என்ற சகலைன் வயது 50/21, இவர் மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டியாக கடந்த 4 வருடமாக இருந்து வருகிறார் இவர் கடந்த 2 ம் தேதி மாலை சுமார் 5.30 […]
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமன்றி வாக்களிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது…
விருதுநகர் மாவட்டம்:- தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமன்றி வாக்களிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது… சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் , அமைதியான முறையில் தேர்தல் நடத்த பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதை வழியுறுத்தியும் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய கொடி […]
வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல்துறையினர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள்.
வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல்துறையினர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள். ♻️வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த இரண்டு மாதங்களில் 37 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் […]
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையை அணிவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் […]
சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு
சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவமனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை தெற்கு போக்குவரத்து முதல் நிலை காவலர் 3897 திரு. திருப்பதி திரு. முத்துராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் திரு மதி.பால்த்தாய் அவர்கள் அங்கிருந்து அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்ததால் பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.
திருச்சி 7, 8 தேதிகளில் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை செய்தி வெளியீடு.
திருச்சி 7, 8 தேதிகளில் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை செய்தி வெளியீடு. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சியில் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் 8-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் புறநகர் பஸ்கள் குடமுருட்டி சோதனை சாவடி எண்-7, […]