நாமக்கல்லில் 2.70 டன் புகையிலை, குட்கா பறிமுதல். நாமக்கல் மாவட்டத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு 43 பேரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், […]
Month: July 2021
சாலையோரம் பற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
சாலையோரம் பற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் மதுரை விரகனூர் சுற்று சாலையில் சிந்தாமணி அருகே சாலை ஓரத்தில் குவித்து வைக்கப்பட்ட குப்பையில் மர்ம நபர்கள் பற்ற வைத்த தீ அருகில் இருந்த முள் செடிகளில் மல மல வென்று பற்றி எரிந்தது. தகவல் அறிந்த அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் திரு. உதயகுமார் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி மதுரை போக்குவரத்து காவல்துறையின் சிறந்த ஆலோசனை
இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வித்தியாசமான நடைமுறையில் மதுரை மாநகர தல்லாகுளம் சட்டம் ஒழுங்கு கூடுதல் உதவி ஆணையர் மதுரை மாநகரில் வாகன ஓட்டிகளின் தூக்கத்தை போக்க தனது சொந்த செலவில் டீ & காபி மற்றும் செல்ஃபி எடுத்து குதூகலபடுத்தும் தல்லாகுளம் கூடுதல் உதவி ஆணையர் திரு.சேகர் அவர்கள். இதனால் வாகன ஓட்டிகள் பெருமகிழ்ச்சியடைகின்றனர்.
மேலூர் அருகே, பொதுப்பாதை பிரச்சனையில் முதியவரை தாக்கிய இளைஞர் கைது
மேலூர் அருகே, பொதுப்பாதை பிரச்சனையில் முதியவரை தாக்கிய இளைஞர் கைது மேலூரை அடுத்தகீழையூர் ஆதிதிராவிடர் காலனியில் பொதுப்பாதை சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் அதை கொஞ்சம் கொஞ்சமாக ஊராட்சி நிர்வாகம் சரி செய்து கொண்டு வருகிறது, இந்த நிலையில் பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாக பூசாரி வயது 70S/o-நொண்டி, கீழையூர் என்பவரை அதே தெருவில் இருக்கும் சந்திவீரன் மகன், சந்துரு வயது 27 என்பவர் தாக்கியதில் காயமடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் […]
தடை செய்யப்பட்ட பான் மசாலா போதைப்பொருள சுமார் 450 கிலோ பறிமுதல்.
தடை செய்யப்பட்ட பான் மசாலா போதைப்பொருள சுமார் 450 கிலோ பறிமுதல். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி ஏ.டி.எஸ்.பி.மணிமாறன் அவர்களின் தலமையில் மதுவிலக்கு காவல் பிரிவினர் பள்ளிபாளையம் ஆர். எஸ். ரோடு குட்டை முக்கு பகுதியில் ரோந்து செல்லும் போது நெல்லை மாரிமுத்து ஸ்டோர் என்ற கடையில் சோதனை செய்து சுமார் 450 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற போதைப் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். வியாபாரி வனராஜ் வயது 40.என்பவரை […]
சென்னையில் 69 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
சென்னையில் 69 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார் சென்னை மாநகரில், காலியாக இருந்த 34 ஆய்வாளர்கள் பணியிடங்களையும் நிரப்பி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பல மாவட்டங்கள் மற்றும் தலைமை இடத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டங்களில் பணிபுரியும் மேலும் 35 ஆய்வாளர்களையும் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
நடு ராத்திரியில் மனநலம் பாதித்த இளம் பெண்ணை காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்த திருநகர் காவல் நிலைய காவலர்
நடு ராத்திரியில் மனநலம் பாதித்த இளம் பெண்ணை காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்த திருநகர் காவல் நிலைய காவலர் மதுரை, திருநகர் W1, காவல் நிலைய சிறப்புசார்பு ஆய்வாளர் திரு.பாலகுமரன் அவர்கள் இன்று 22 ம் தேதி இரவு ரோந்து பணியில் இருந்த போது திருநகர் மூன்றாவது ஸ்டாப் அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றுவதை கண்டார் உடனே அவரிடம் சென்று விசாரித்த போது அவருக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை இரவு பணியில் இருந்த சிறப்பு சார்பு […]
மதுரை, செல்லூர் பகுதியில் 5 பைசாவிற்கு பிரியாணி வாங்க முண்டியடித்த மக்கள்
மதுரை, செல்லூர் பகுதியில் 5 பைசாவிற்கு பிரியாணி வாங்க முண்டியடித்த மக்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி மதுரையை சேர்ந்த அட்சயா என்பவர் செல்லூர் பகுதியில் புதிதாக பிரியாணிக் கடை திறந்தார். மேலும் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி 5 பைசா நாணயத்துடன் வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அங்கு பிரியாணி வாங்க 5 பைசா நாணயத்துடன் 500 க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர் இதனை எதிர்பார்க்காத கடை ஊழியர்கள் திகைத்தனர். 5 […]
கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை
கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கடும் எச்சரிக்கை கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு […]
சாத்தான்குளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
சாத்தான்குளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த வேம்பு மகன் முருகன் வயது 42. இவருக்கும் இவரது உறவினரான கிருஷ்ணன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ஆழ்வார் மகன் இசக்கிமுத்து வயது 25 என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகன் இசக்கிமுத்து வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று (21.07.2021) சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெரு அருகே வந்து […]